வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!


கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (30) மாலை பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் குறித்த பெண் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான தகவலைத் தொடர்ந்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்கள் கலந்த சேலை அணிந்திருந்ததுடன், பச்சை நிறப் பை ஒன்றையும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.