கடற்பகுதியில் நீராடச் சென்ற 3 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கிப் பலி - விடுமுறையில் விபரீதம்
ஹங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
நேற்று (30) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஹுங்கம பகுதியைச் சேர்ந்த 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று மாணவர்கள் பலியாகியுள்ளனர். வார இறுதி விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் கடற்கரைக்குச் சென்ற அவர்கள், கடுமையான அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை முதல் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், இன்று (31) காலை மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
