இலங்கையின் சில பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை!
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வலய கல்வி பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.
தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் இன்புளுவென்சா போன்ற அறிகுறிகளுடன் வைரஸ் தொற்று பரவி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் தெனியாய தேசிய பாடசாலை, புனித மத்தேயு பாடசாலை, ராஜபக்ஷ வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த ஆரம்ப பாடசாலை ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
