வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்!


வியட்நாம் ஜனாதிபதி டோ லம் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இன்று இரவு அவர் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் சுமார் 200 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட தூதுக்குழுவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளது. மேலும், வியட்நாம் ஜனாதிபதி டோ லம் நாளை இலங்கை பாராளுமன்றத்தில் சிறப்பு உரையாற்றவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியட்நாம் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு இன்று மற்றும் நாளை கொழும்பு நகரின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.