தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான ஏற்றத் தாழ்வுகள் பதிவாகி வருகின்றன.
இன்றைய (07-05-2026) நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,391,195 ரூபாவாக காணப்படுகிறது.
அதேவேளை, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 49,080 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் 392,600 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதனுடன், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 44,990 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் 359,950 ரூபாவாகவும் காணப்படுகிறது.
மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராம் 42,950 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 21 கரட் தங்கப் பவுண் 343,600 ரூபாவாக இன்று விற்பனையாகி வருகின்றது.
Tags:
இலங்கை செய்தி
