உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு ஈரான் அளித்த பதிலை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஏற்காததே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெயின் ஒரு பேரல் விலை 104.1 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை கச்சா எண்ணெயின் ஒரு பேரல் விலை 98.51 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
Tags:
உலகம்
