தமிழக அரசியல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் முதலமைச்சர் அரியணையில் ஏறியவர்களின் பட்டியலில் இடம்பிடித்த விஜய்!


தமிழக அரசியல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தலைவர்கள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், 51 வயதில் முதலமைச்சர் பதவியை ஏற்று இந்தப் பட்டியலில் 5வது இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்த வரிசையில், மிக இளவயதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பெருமை மறைந்த முன்னாள் முதலமைச்சர் J. ஜெயலலிதாவுக்கு சொந்தமானது. அவர் 1991ஆம் ஆண்டு 43 வயதில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

அடுத்து, மு. கருணாநிதி 44 வயதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் 50 வயதில் முதலமைச்சர் பதவியை ஏற்றார். அதனைத் தொடர்ந்து K. காமராஜர் 51 வயதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

தற்போது விஜயும் 51 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்று, காமராஜருக்கு அடுத்தபடியாக 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து C. N. அண்ணாதுரை 57 வயதிலும், (M. G. Ramachandran) எம்.ஜி.ஆர் 60 வயதிலும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றனர்.

மேலும், K. எடப்பாடி பழனிசாமி 62 வயதிலும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் 68 வயதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்றமை குறிப்பிடத்தக்கது.