உப்பு ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்!


இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உப்பு ஏற்றுமதி மூலம் 205 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டப்பட்டிருந்த நிலையில், இதனை மேலும் விரிவுபடுத்தி அடுத்த சில ஆண்டுகளில் வருமானத்தை இரட்டிப்பாக அதிகரிப்பதே தற்போதைய திட்டமாகும்.

உப்புத் தொழில்துறையின் ஏற்றுமதி போட்டித்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையில் (EDB) நடைபெற்றுள்ளது. இந்த வேலைத்திட்டம், ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் கைத்தொழில் உற்பத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.