சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய்!


தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமானது.

இதன்போது, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் விஜய், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

முதலமைச்சராக பதவியேற்ற நாளைப் போலவே, இன்றும் கோட்-சூட் அணிந்து சட்டசபைக்கு வந்திருந்த விஜய், உறுப்பினர் பதவிப் பிரமாணம் செய்யும் போது “உளமார உறுதி கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும், பின்னர் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்தடுத்து பதவியேற்றனர்.

மேலும், உதயநிதி ஸ்டாலினும் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அதேபோல், போடி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் எம்எல்ஏவாக பதவியேற்றார்.

இதற்கிடையில், தேவையான சான்றிதழ்களை கொண்டு வராத காரணத்தால் அமைச்சர் கீர்த்தனா இன்று பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.