தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!


இலங்கையில் இன்று (11) தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின் தாக்கத்தால், உள்நாட்டு சந்தையிலும் தங்க விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தங்கத்தின் விலை சுமார் 2,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 394,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 362,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,313 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,665 அமெரிக்க டொலராகவும், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 80 அமெரிக்க டொலராகவும் காணப்படுகின்றது.