லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன.
எனினும், சினோபெக் நிறுவனம் சுப்பர் டீசலின் விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அந்நிறுவனம் தற்போது ஒரு லீற்றர் சுப்பர் டீசலை 600 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்து வருகிறது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின்படி,
🔹 ஒக்டேன் 92 பெற்றோல் – 410 ரூபாயில் இருந்து 24 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 434 ரூபாய்.
🔹 ஒக்டேன் 95 பெற்றோல் – 470 ரூபாயில் இருந்து 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 495 ரூபாய்.
🔹 ஒட்டோ டீசல் – 392 ரூபாயில் இருந்து 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 407 ரூபாய்.
🔹 சுப்பர் டீசல் – 458 ரூபாயில் இருந்து 20 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 478 ரூபாய்.
🔹 மண்ணெண்ணெய் – 265 ரூபாயில் இருந்து 20 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 285 ரூபாய்.
இந்த புதிய விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலைகளின் இந்த உயர்வு போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
