முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறித்து வெளியான தகவல்!


எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளின் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாயாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பெற்றோல் விலை மொத்தமாக 36 ரூபாயால் அதிகரித்துள்ளதுடன், கிரீஸ், இன்ஜின் எண்ணெய் மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகளும் உயர்ந்துள்ளதால் கட்டணத் திருத்தம் அவசியமாகியுள்ளது என சங்கம் வலியுறுத்தியுள்ளது.