இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!
இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாகப் பொறுப்பேற்றுள்ள அவருக்கான நியமனம் நேற்று (29) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தில் நீண்டகால அனுபவமும் சிறப்பான சேவையும் கொண்ட மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, இராணுவத்தின் புகழ்பெற்ற இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும் பதவி நிலை பிரதானி பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் பல்வேறு முக்கிய கட்டளைப் பதவிகளையும் திணைக்களப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய உத்திகள் மற்றும் அனுபவங்களுடன் தனது கடமைகளை அவர் முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
