சூரிய சக்தி மின்கலங்களை இன்று பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை!


வெசாக் பண்டிகைக் காலத்தில் தேசிய மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி மின்கலங்களை இன்று (30) பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது மின் நுகர்வு குறைவடைந்துள்ள நிலையிலும், வெசாக் காலத்தில் மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையைப் பேணும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள மின்கலங்களின் உரிமையாளர்கள், அவற்றை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய மின்சார கட்டமைப்பின் சீரான செயற்பாட்டை உறுதிப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.