நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை : டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!


நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு பரவல் அதிகமாகக் காணப்படும் 42 உயர்அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 27,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 14 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 5,930 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.