இன்று விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
டெங்கு அபாயம் அதிகமாக உள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
43 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் மிக உயர்ந்த அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், 6 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சமூக வைத்திய விசேட நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 26,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 13 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நோயின் பரவலை கட்டுப்படுத்த சமூக விழிப்புணர்வு மிக முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
