வெளிநாட்டவர்களுக்கு வீடு வழங்குவோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
வெளிநாட்டவர்களுக்கு வீடு அல்லது சொத்துகளை வாடகை/குத்தகைக்கு வழங்குவோர், அதற்கான தகவலை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை தெரிவித்தார்.
சில வெளிநாட்டவர்கள் வாடகைக்கு பெறப்பட்ட வீடுகளை பயன்படுத்தி நிதி சம்பந்தமான குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலை இருப்பதால், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
