மீண்டும் அதிகரித்த டொலரின் பெறுமதி!


அமெரிக்க டொலரின் விற்பனை விலை, இலங்கை ரூபாயின் அடிப்படையில் மீண்டும் உயர்வடைந்து 330 ரூபாயைத் தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (27) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 320.40 ரூபாயாகவும், விற்பனை விலை 330.81 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இதனுடன் ஒப்பிடுகையில், நேற்று (26) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகித அறிக்கையில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 318.32 ரூபாயாகவும், விற்பனை விலை 328.69 ரூபாயாகவும் காணப்பட்டிருந்தது.

இதன் மூலம், ஒரே நாளில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொலர் பெறுமதியின் இந்த உயர்வு, இறக்குமதி பொருட்களின் விலை, எரிபொருள் செலவு மற்றும் உள்ளூர் சந்தை விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.