நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்; தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!


இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 389,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று அதன் விலை 3,000 ரூபாயால் குறைந்துள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி,

🔸 24 கரட் தங்கம் ஒரு பவுண் – 386,000 ரூபாய்

🔸 22 கரட் தங்கம் ஒரு பவுண் – 355,200 ரூபாய்

என விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை,

🔹 24 கரட் தங்கம் ஒரு கிராம் – 48,250 ரூபாய்

🔹 22 கரட் தங்கம் ஒரு கிராம் – 44,400 ரூபாய்

என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் நாணய மாற்று விகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே தங்க விலையின் ஏற்றத் தாழ்வுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.