நாடாளுமன்ற வளாகத்திலிருந்து துரத்தப்பட்ட சாமர சம்பத் எம்.பி!
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை சபையிலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவுக்கு இணங்க அவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
சபாநாயகரின் அறிவுறுத்தல்களை மதிக்காமல் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக சபையில் பேச வேண்டாம் என சபாநாயகர் முன்பே எச்சரித்திருந்த நிலையில், அதனை மீறி அவர் கருத்து தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
