பால் தேநீரின் விலை அதிகரிப்பு!
நாட்டில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை ரூ.5 உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
