கட்டிலில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு!
அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை பகுதியில், பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவம் நேற்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தகவல்களின் படி, குழந்தை பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக உருண்டு அருகிலிருந்த தரையில் விழுந்துள்ளது. இதனால் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், குழந்தை மயக்கமடைந்துள்ளது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துள்ளதாக கடமையில் இருந்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பெற்றோரின் கண்முன்னே இரண்டு வயது குழந்தை உயிரிழந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
