தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடியிடமிருந்து வந்த செய்தி!
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் முதலமைச்சர் விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
அவரது பதவிக்காலம் வெற்றிகரமாகவும் மக்களுக்குப் பயனளிப்பதாகவும் அமைய நான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் நலன்களை முன்னிறுத்தி, மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து செயல்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இந்திய செய்தி
