அரச வெசாக் விழா இன்று ஆரம்பம்!
புத்தரின் 2570-ஆம் ஆண்டை முன்னிட்டு நடத்தப்படும் தேசிய அரச வெசாக் விழா, ‘தட்சிண பிரபா’ என்ற பெயரில் இன்று (27) மாத்தறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பமாகிறது.
“அபித்தரேத கல்யாண” என்ற புத்தரின் உன்னத போதனையையும், “பொது நன்மைக்காக நாம் ஒன்றுபடுவோம்” என்ற சமூக செய்தியையும் கருப்பொருளாகக் கொண்டு இந்த வருட வெசாக் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று தொடங்கும் இந்த தேசிய வெசாக் நிகழ்வுகள், எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெறவுள்ளன.
இந்த ஆண்டு அரச வெசாக் விழாவின் பிரதான தொடக்க நிகழ்வு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், திஹகொட – மிதெள்ளவல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான ரஜமகா விகாரையில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, மத நிகழ்வுகள், ஆன்மீக சொற்பொழிவுகள், வெசாக் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல சமூக நலத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
