கொள்ளுப்பிட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன நாட்டு பிரஜைகள் கைது!
கொள்ளுப்பிட்டி பகுதியில் உரிமமின்றி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 சீன நாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி வீதியில் இயங்கி வந்த இரவு விடுதியொன்றை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 27 முதல் 48 வயதுக்குட்பட்ட சீனப் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
