சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சி!


இன்று (28) சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 115.71 அமெரிக்க டொலர்களால் குறைந்து 4,386.19 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2.57 சதவீத வீழ்ச்சியாகும்.

இதேவேளை, வெள்ளியின் விலையிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 3.80 டொலர்களால் குறைந்து 72.54 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 4.97 சதவீத வீழ்ச்சியாகும்.

சர்வதேச சந்தை வீழ்ச்சியின் தாக்கமாக இலங்கையிலும் தங்கத்தின் விலையில் குறைவு காணப்படுகிறது. அதன்படி, இன்று தங்கத்தின் விலை சுமார் 3,000 ரூபாயால் குறைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,050 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.