நாட்டில் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை!
கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சார அமைப்பின் சமநிலையைப் பேணும் நோக்கில், மின்விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தற்போது மின்சார விநியோகத்தை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி
.jpg)