அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்த ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது!


ராஜங்கனே சத்தாரதன தேரர் இன்று (08) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக ஊடகங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தேரர், ஸ்ரீலங்கா ராமண்ய மகா நிகாயவிலிருந்து கடந்த ஆண்டு அதன் செயற்குழு தீர்மானத்தின் மூலம் நீக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்த நிலையில், சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.