தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான விற்பனை கடைகளை 2 வாரத்திற்குள் மூட வேண்டும் : முதலமைச்சர் விஜய்யின் அதிரடி உத்தரவு!
இந்தியாவின் தமிழ்நாட்டில், வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களிற்கு அருகில் அமைந்துள்ள 717 மதுபான விற்பனை நிலையங்களை இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மது விற்பனை மூலம் அரசாங்கத்திற்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்திருந்தாலும், அதனால் பல குடும்பங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இந்திய செய்தி
