சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 200 வெளிநாட்டவர்கள் கைது!
சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாளப் பிரஜைகள் உட்பட மொத்தம் 198 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி, ஹிக்கடுவ மற்றும் மிடிகம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி சுற்றிவளைப்புகளின் போது இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கணினி குற்றச் சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில், காலி கல்வடுகொட மற்றும் ஸ்ரீ சுமேத மாவத்த பகுதிகளில் உள்ள இரண்டு தங்கும் விடுதிகளில் தங்கியிருந்த 110 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பை காலி பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து 58 கணினிகள் மற்றும் 79 கைப்பேசிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
