மின்னல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கொழும்பு, களுத்துறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கடும் மின்னல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (17) நண்பகலில் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும்.
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும், மேற்கண்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையும் கடும் மின்னலும் பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது சில இடங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
