அரச நிறுவனங்களுக்கு விடுமுறை - வௌியான அறிவிப்பு!


தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கு கடந்த திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) ஆகிய இரு தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று (15), நாளை (16), நாளை மறுநாள் (17) ஆகிய தினங்களில் அனைத்து அரச நிறுவனங்களும் அலுவலகங்களும் வழமைபோல் செயல்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே, இன்று முதல் அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் பணிகள் வழக்கம்போல் நடைபெறும்.