பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி சித்திரவதை - பெண் உட்பட 5 பேர் கைது!
ராகம பகுதியில் உள்ள ஒரு கடை வளாகத்தில் பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, முக்கிய பெண் சந்தேகநபர் உட்பட ஐந்து பேர் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் போது, 27 வயதுடைய ராகம பகுதியைச் சேர்ந்த பிரதான பெண் சந்தேகநபருடன், 20 முதல் 23 வயதுக்குட்பட்ட ராஜாங்கனை, கடவத்த, ராகம மற்றும் திருகோணமலை சீனவராய பகுதிகளைச் சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 2026 ஏப்ரல் 18ஆம் திகதி வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Tags:
இலங்கை செய்தி
