அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!
பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, செலவுகளை மிகக் குறைந்த மட்டத்தில் வைத்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
பாடசாலை நிகழ்வுகளுக்காக பெற்றோர்களிடமிருந்து அதிகப்படியான நிதி வசூலிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் எளிமையான முறையிலும் குறைந்த செலவிலும் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை புறக்கணித்து, சில பாடசாலைகள் இன்னும் ஆடம்பரமான முறையில் விழாக்களை நடத்த அதிக செலவுகளை மேற்கொள்வதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பாடசாலை நிதி முகாமைத்துவம் தொடர்பான 54/2023 இலக்கச் சுற்றுநிருபம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற நிதி விதிமுறைகளை அதிபர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நினைவூட்டப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
