நாளை மறுதினம் முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழை!


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுநாள் (20) மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று அதிகரித்த வெப்பநிலை நிலவும்.

மேலும், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும், நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதே நேரத்தில், நாட்டின் பிற பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.