ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்!


இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று மற்றும் கலாசார உறவுகள் குறித்து விரிவாக கருத்துகள் பரிமாறப்பட்டன.

மேலும், இந்தியாவின் “அண்டை நாடுகள் முதன்மை” என்ற கொள்கையின் அடிப்படையில், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இந்தியா வழங்கி வரும் வீடமைப்பு திட்டங்கள் மற்றும் ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர்.

இத்தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.