பெட்ரோல் வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி!
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு QR முறை இல்லாமல் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக தளர்வு பெட்ரோல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், குறிப்பிட்ட காலப்பகுதியில் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேரடியாக எரிபொருள் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் கிடைப்பில் ஏற்பட்ட முன்னேற்றமும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் வரிசைகள் குறைந்திருப்பதும் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக CPC மேலும் அறிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
