எலி காய்ச்சல் பரவும் அபாயம் - பொது சுகாதாரப் பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
புத்தாண்டு காலங்களில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டுகளின் போது எலி காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாலான நிகழ்வுகள் நீர்நிலைகள், சிறிய குளங்கள் மற்றும் வயல்வெளிகள் அருகில் நடைபெறுவதால், அவ்விடங்களில் விளையாடுவது நோய் பரப்பும் கிருமிகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் காய்ச்சல், தசை வலி போன்ற அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
