தனியார் வங்கியின் பெயரில் போலி இணையதளம் மூலம் பண மோசடி! 22 வயதுடைய இளைஞன் கைது!
தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல உருவாக்கப்பட்ட போலி இணையதளத்தின் மூலம் ரூ. 1,000,024 பணத்தை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்ற விசாரணை வடமேல் மாகாணப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் பின்னர், நேற்று (20) சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வாரியபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (21) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
Tags:
இலங்கை செய்தி
.jpg)