இடைநிறுத்தப்பட்டிருந்த டெஹ்ரான் நகரின் பிரதான வானூர்தி நிலையங்கள் மீண்டும் திறப்பு!


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட பல வாரங்களான போர்ச் சூழ்நிலையால் இடைநிறுத்தப்பட்டிருந்த டெஹ்ரான் நகரின் பிரதான வானூர்தி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இமாம் கொமெய்னி வானூர்தி நிலையம் மற்றும் மெஹ்ராபாத் வானூர்தி நிலையம் ஆகிய முக்கிய வானூர்தி நிலையங்கள் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பதற்றம் காரணமாக வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.