இலங்கையில் ஆணுறைகளின் விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஆணுறை விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருந்தபோதிலும், இலங்கையில் ஆணுறைகளின் விலைகள் உயரப்போவதில்லை என இலங்கை குடும்ப அமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை குடும்ப அமைப்பு சங்கம் நாட்டில் ஆணுறை விநியோகத்தில் சுமார் 90% பங்கைக் கொண்ட ஆறு வகையான தயாரிப்புகளை வழங்கி வருகின்றது.
நாட்டில் தேவையான பெரும்பாலான கருத்தடை சாதனங்கள் தாய்லாந்து, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஈரான் உட்பட மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஆணுறை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தியாளர்களில் ஒன்றான மலேசியாவின் கரெக்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை 20% முதல் 37% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tags:
இலங்கை செய்தி
