நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என்றும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதற்கும், மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதால், அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.