நாட்டில் படிப்படியாக குறைந்து செல்லும் தங்க விலை : மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!


கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை இன்று (23) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றுடன் (22) ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாவால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் விலைகள் பின்வருமாறு:

  • 24 கரட் தங்கம் பவுண் ஒன்று – ரூ. 396,000
  • 22 கரட் தங்கம் பவுண் ஒன்று – ரூ. 364,300

அதேபோல், கிராம் ஒன்றின் விலைகள்:

  • 24 கரட் தங்கம் – ரூ. 49,500
  • 22 கரட் தங்கம் – ரூ. 45,538

கடந்த வாரம் முதல் வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சர்வதேச சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் எதிர்காலத்தில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த அக்ஷய திருதியை காலத்தில் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 9500 ரூபாவால் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.