முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி ஆயுதங்களுடன் கைது!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவு (CCD) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனையில் இரண்டு T-56 ரக மெகசின்கள், 221 தோட்டாக்கள் மற்றும் ஒரு கையெறி குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
Tags:
இலங்கை செய்தி
