எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட கருத்து!
நாட்டில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைகள், போர்ச் சூழல் தணிந்தவுடன் விரைவில் குறைக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை கூறினார். மேலும் நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி தொடரும் எனவும் அவர் உறுதி செய்தார்.
உலக சந்தையில் எண்ணெய் விலை ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், அந்த விலை உயர்வின் முழுப் பாரத்தையும் மக்கள் மீது சுமத்தாமல், அதன் ஒரு கணிசமான பகுதியை அரசுத் திறைசேரி ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள எரிபொருள் விலைகள், போர்ச் சூழல் தணிந்த பிறகு விரைவில் குறைக்கப்படுவது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
Tags:
இலங்கை செய்தி
