இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!
அரச மற்றும் அரச அனுசரணையில் செயல்படும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (20) முதல் ஆரம்பமாகின்றன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை, இன்று தொடங்கி எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், முஸ்லிம் பாடசாலைகளில் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று தொடங்கி, இந்த மாதம் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதன் பின்னர், மே 4ஆம் திகதி முதல் இரண்டாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 10ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி
