வன்முறைத் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தயாராக இருந்த கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வன்முறைத் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் மூவர், வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சந்தேகநபர்கள் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தாக்குதல் முயற்சியை முறியடித்து, மூன்று வாள்களுடன் சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை செய்தி
.jpg)