ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரல் : ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாகக் கடைப்பிடிக்குமாறு அறிவிப்பு!
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூரும் வகையில், ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாகக் கடைப்பிடிக்க கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களின் நினைவாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ளார்.
மேலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நீண்டகாலமாக எதிர்பார்த்து வரும் நீதி கிடைக்க வேண்டும், சம்பவத்தின் உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதும் இந்த விசேட பிரார்த்தனை தினத்தின் முக்கிய குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம், நாட்டின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
