சாதாரண தர செய்முறை பரீட்சைகள் - வெளியான முக்கிய தகவல்!
2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள், எதிர்வரும் 22ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 1,198 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பரீட்சையில் மொத்தம் 162,587 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாகவும், பரீட்சைகள் மே மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்கள் குறிப்பிட்ட முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
அனுமதி அட்டைகளில் ஏதேனும் பிழைகள் அல்லது திருத்தங்கள் தேவையெனில், அவற்றைச் சீர்செய்வதற்காக பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் பிரிவுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
