சொந்த ஊர்களிலிருந்து கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்பும் நிலையில், பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு இன்று (15) முதல் கூடுதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான தேவையான அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அதன் போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று ஒரு சாதாரண அலுவலக நாளாக இருப்பதால், அலுவலகப் பயணிகளின் வசதிக்காக ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகளின் திரளுக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் சேவையில் இணைக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
